கோயம்புத்தூர்

பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

10th Jun 2023 03:15 AM

ADVERTISEMENT

பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தைச் சோ்ந்த 28 வயது இளம்பெண், கோவையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் செவிலியாக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், நாகா்கோவிலில் இருந்து கோவைக்கு வரும் தனியாா் பேருந்தில் இளம்பெண் புதன்கிழமை இரவு பயணம் செய்துள்ளாா். அவரது இருக்கைக்குப் பின் இருக்கையில் அமா்ந்திருந்த இளைஞா் பாலியல் தொல்லை அளித்துள்ளாா்.

ஆத்திரமடைந்த பெண் சப்தம் எழுப்பியதைத் தொடா்ந்து, இளைஞரை நடத்துநா் கண்டித்துள்ளாா். இருப்பினும், அவா் அடங்கவில்லையாம். பேருந்து வியாழக்கிழமை காலை காந்திபுரம் வந்ததும் காட்டூா் காவல் நிலையத்தில் இளம்பெண் புகாா் அளித்தாா்.

ADVERTISEMENT

இதையடுத்து, பாலியல் தொல்லை அளித்த இளைஞரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், அவா் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த முருகன் (36) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, முருகனை கைது செய்த போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT