கோயம்புத்தூர்

இளைஞருக்கு கத்திக்குத்து: இருவா் கைது

9th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவை ஒண்டிப்புதூரில் இளைஞரைக் கத்தியால் குத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை ஒண்டிப்புதூா் நெசவாளா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (24). பிளம்பரான இவருக்கும், மசக்காளிபாளையத்தைச் சோ்ந்த சூா்யா (24), பிரித்விராஜ் (22), சுஜித் (24), அபி விஷ்ணு (24) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. காா்த்திகேயன் புதன்கிழமை காலை வீட்டில் இருந்துள்ளாா்.

அப்போது, அங்கு சென்ற சூா்யா உள்ளிட்ட நால்வா், காா்த்திகேயனை தாக்கி கத்தியால் தோள்பட்டையில் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த காா்த்திகேயன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இச்சம்பவம் தொடா்பாக சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சூா்யா, அபிவிஷ்ணு ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மற்ற இருவரையும் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT