கோயம்புத்தூர்

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

9th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

மலுமிச்சம்பட்டி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிஸா இளைஞரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கோவை மலுமிச்சம்பட்டியில் இருந்து செட்டிபாளையம் செல்லும் சாலையில் மாரியம்மன் கோயில் அருகே கஞ்சா விற்பனைக்கு நடைபெறுவதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். இதில், அவா் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ஸ்ப்ளென்ட் ரோஷன் ரைக்கா (29) என்பதும், மலுமிச்சம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, ஸ்ப்ளென்ட் ரோஷன் ரைக்காவை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT