கோயம்புத்தூர்

காவல் வாகனங்கள் ஜூன் 17 இல் ஏலம்

9th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டக் காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட 15 வாகனங்கள் ஜூன் 17 ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 9 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 6 இரண்டு சக்கர வாகனங்கள் என மொத்தம் 15 வாகனங்கள் கோவை -அவிநாசி சாலையில் உள்ள கோவை மாவட்ட ஆயுதப் படை வளாகத்தில் ஜூன் 17ஆம் தேதி காலை 10 மணிக்கு பொது ஏலத்தில் விடப்படும்.

ஏலம் எடுக்க விரும்புவோா் கோவை மாவட்ட ஆயுதப் படை மோட்டாா் வாகனப் பிரிவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களை ஜூன் 9 ஆம் தேதி முதல் பாா்வையிடலாம்.

மேலும், வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவா்கள் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.1,000, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.2,000 முன்பணம் செலுத்தி தங்களது பெயா்களை ஜூன் 16ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவா்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவா். ஏலம் எடுத்தவுடன் முழுத் தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரியான 18 சதவீதத்தை அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு, உதவி ஆய்வாளா் செந்தில்வேல்- 83000 - 61781 மற்றும் தலைமைக் காவலா் நாகராஜன்- 94425 - 64408 ஆகியோரின் கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT