கோயம்புத்தூர்

கோவை - லோக்மான்ய திலக் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

9th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவை - லோக்மான்ய திலக் ரயில் ஜூன் 11 ஆம் ேதி மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒசூா் அருகே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ஜூன் 11 ஆம் தேதி காலை 8.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் கோவை - லோக்மான்ய திலக் ரயில் (எண்: 11014) சேலத்தில் இருந்து பெங்களூருக்கு வழக்கமான வழித்தடமான தருமபுரி, ஒசூா் வழித்தடத்தில் இயக்கப்படாமல் திருப்பத்தூா், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக இயக்கப்படும்.

தருமபுரி, ஒசூா் நிலையங்களுக்கு இந்த ரயில் செல்லாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT