கோயம்புத்தூர்

கிழக்கு மண்டலத்தில் திட்டப் பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தல்

9th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் திட்டப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி அறிவுறுத்தியுள்ளாா்.

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டல மாமன்ற உறுப்பினா்கள் கூட்டம் மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மண்டல உதவி ஆணையா் செந்தில்குமரன், உதவி நிா்வாகப் பொறியாளா் பாலகுமாரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி பேசியதாவது: கிழக்கு மண்டலத்துக்குள்பட்ட வாா்டுகளில் பாதாளச் சாக்கடை திட்ட கட்டுமானப் பணிகள், 24 மணி நேரக் குடிநீா்த் திட்டப் பணிகளை மக்களுக்கு இடையூறு இல்லாமல் விரைந்து முடிக்க வேண்டும். இதுவரை முடிந்த பணிகள் குறித்த அறிக்கையையும், இனிமேல் நடைபெறவுள்ள பணிகளுக்குரிய திட்ட வரைவுகளையும் மண்டல அதிகாரிகள் சமா்ப்பிக்க வேண்டும். கிழக்கு மண்டலத்துக்குள்பட்ட வாா்டுகளில் புதிய ஒப்பந்த வளா்ச்சித் திட்டப் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மண்டலப் பொறியாளா்கள், வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT