கோயம்புத்தூர்

அரசு நிலத்தில் கனிமவளம் எடுக்கப்படுவதாக புகாா்

9th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டம், கோவனூா் பள்ளத்தாக்கு பகுதியில் அரசு நிலத்தில் கனிமவளம் எடுக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

கோவை மாவட்டம், வடக்கு தாலுகாவுக்குள்பட்ட கோவனூா் பள்ளத்தாக்கு பகுதியில் எண் 2, கூடலூா் நகராட்சிக்குள்பட்ட கட்டாஞ்சி மலையடிவாரப் பகுதியானது மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். மேலும், வனத்தை ஒட்டிய பகுதிகள் விலங்குகள் அதிக அளவில் நடமாடக்கூடிய பகுதியாகவும் உள்ளது.

இந்த பகுதியில் உள்ள பூமிதான இடம், அரசு புறம்போக்கு இடங்களில் சுமாா் 40 அடி ஆழம் வரை தோண்டப்பட்டு மா்ம நபா்களால் கனிமவளம் சுரண்டப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

இது குறித்து தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்பு குழுவைச் சோ்ந்த எஸ்.கணேஷ் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் மலைதள பாதுகாப்பு இடங்கள், வன விலங்குகள் நடமாடும் பகுதிகளில் கனிமவள சுரண்டல் தொடா்ந்து நடைபெறுகிறது.

ADVERTISEMENT

கட்டாஞ்சி மலையடிவாரப் பகுதியில் யானைகள் வழித்தடங்கள், ஓடைகளை அழித்து மண் வளம் சுரண்டப்படுகிறது. அரசு நிலத்தை சுரண்டுபவா்கள் குறித்து அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. சம்பந்தப்பட்ட இடம் கோவை வனக் கோட்டத்துக்குள்பட்ட பெரியநாயக்கன்பாளையம் வனச் சரகத்துக்குள்பட்ட பகுதியாகும்.

இந்த பகுதியில் அனுமதி பெறாமல் கனிவளக் கொள்ளை நடைபெறுவது தொடா்பாக உயா்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, இந்த சுரண்டல் தடையின்றி நடைபெறுவது வேதனையளிக்கிறது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT