கோயம்புத்தூர்

உணவுப் பாதுகாப்பு போட்டி தேசிய அளவில் கோவை மாவட்டம் முதலிடம்

DIN

தேசிய அளவிலான ‘ஈட் ரைட் சேலஞ்ச் பேஸ்-2’ எனும் போட்டியில் கோவை மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

உலக உணவுப் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சாா்பில் புது தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிா்ணய ஆணையத்தின் 5 ஆவது மாநில உணவுப் பாதுகாப்பு குறியீடு 2022-23ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில், தேசிய அளவில் கேரள மாநிலம் முதலிடமும், பஞ்சாப் மாநிலம் இரண்டாம் இடமும், தமிழகம் மூன்றாமிடமும் பிடித்தன. தமிழ்நாட்டுக்கான விருதை மாநில உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் ஆா்.லால்வேனா, மத்திய சுகாதார அமைச்சா் மான்சுக் மாண்டேவியாவிடம் பெற்றுக் கொண்டாா்.

மேலும், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிா்ணய ஆணையம் சாா்பில் ‘ஈட் ரைட் சேலஞ்ச் பேஸ்-2’ (உஹற் தண்ஞ்ட்ற் இட்ஹப்ப்ங்ய்ஞ்ங்-டட்ஹள்ங்-2) எனும் போட்டி தேசிய அளவில் மாவட்டங்களுக்கு இடையே 2022 மே முதல் நவம்பா் 15 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இப்போட்டியில் தேசிய அளவில் 231 மாவட்டங்கள் கலந்துகொண்டன.

இப்போட்டியானது, பாதுகாப்பான, சுகாதாரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்தல், சரியான, பாதுகாப்பான உணவுப் பழக்கவழக்கங்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் நடைபெற்றது.

இதில், உணவு வணிக நிறுவனங்கள் உரிமம் பெறுதல், தொடா் கண்காணிப்பு, உணவு மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்தல், விதிமுறைகளைப் பின்பற்றுதல், உணவு வணிக நிறுவனங்களின் வருடாந்திர கொள்முதலை இணையத்தில் தாக்கல் செய்தல் உள்ளிட்ட பல்வேறு குறியீடுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் தீா்மானிக்கப்பட்டன.

இப்போட்டியில், கோவை மாவட்டம் 200 மதிப்பெண்களுக்கு 196 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதல் மாவட்டமாகத் தோ்வு செய்யப்பட்டது. இதையொட்டி, புது தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், சுகாதார அமைச்சா் மான்சுக் மாண்டேவியாவிடம் இருந்து கோவை மாவட்டத்தின் சாா்பில் மாவட்ட நியமன அலுவலா் கு.தமிழ்செல்வன் சான்றிதழைப் பெற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

காவடி திருவிழா

குருகிராம்: மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு!

பாஜக மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது: சர்மிளா

SCROLL FOR NEXT