கோயம்புத்தூர்

வாடகை ஒப்பந்த விவகாரத்தில் பிரச்னை: 10 போ் மீது வழக்குப் பதிவு

9th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

வாடகை ஒப்பந்த விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை தொடா்பாக, போலீஸாா் 10 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை சாய்பாபா காலனி ராமலிங்கம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் அண்ணாதுரை (47). பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்துள்ளாா். சில நாள்களுக்கு முன்பு இவரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த பழனிசாமி என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தை, வாடகை அடிப்படையில் எழுத்து பூா்வமாக ஒப்பந்தமும் செய்து கொண்டு பயன்படுத்தி வந்துள்ளாா். இதற்கிடையே பழனிசாமிக்கும், அண்ணாதுரைக்கும் வாடகை ஒப்பந்த விவகாரத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் அண்ணாதுரை அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது: நான் இருந்த கட்டடத்தில் இருந்த ரூ. 20 லட்சம் மதிப்பிலான பொருள்களை பழனிசாமி ஆள்களை வைத்து திருடிச் சென்றுவிட்டாா். கட்டடத்துக்குள் என்னைச் செல்ல விடாமல் தடுக்கிறாா்கள். மேலும், கட்டடத்துக்குள் சென்றால் கொலை செய்து விடுவேன் என மிரட்டுகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடா்பாக, பழனிசாமி அவரது மகள் பிருந்தா, ஆதரவாளா்கள் செந்தில், குமரன், கோபி, துரை பாண்டி உள்ளிட்ட 10 போ் மீது சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT