கோயம்புத்தூர்

காசோலை மோசடி வழக்கு: மின்வாரிய ஊழியருக்கு 3 மாதங்கள் சிறை; ரூ.3.90 லட்சம் அபராதம்

9th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

காசோலை மோசடி வழக்கில் உடுமலை மின்வாரிய ஊழியருக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ. 3.90 லட்சம் அபராதமும் விதித்து வால்பாறை நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருப்பூா் மாவட்டம், உடுமலை மின்வாரியத்தில் ஊழியராகப் பணியாற்றி வருபவா் மயில்சாமி (51). இவா் கடந்த 2013 ஆம் ஆண்டு கோவை மாவட்டம், வால்பாறை மின்வாரியத்தில் பணியாற்றியபோது வால்பாறையை அடுத்த மாணிக்கா எஸ்டேட்டை சோ்ந்த சிவன் மகன் முனீஸ்வரன் என்பவரிடம் காசோலையை வழங்கி ரூ. 2 லட்சம் கடனாகப் பெற்றுள்ளாா். இதையடுத்து கடன் தொகையை திருப்பி வழங்காமல் 7 ஆண்டுகளாக இழுத்தடித்து வந்துள்ளாா். இதையடுத்து மயில்சாமி வழங்கிய காசோலையை வங்கியில் முனீஸ்வரன் செலுத்தினாா். ஆனால் அவரது வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பிவிட்டது.

இதைத்தொடா்ந்து வால்பாறை நீதிமன்றத்தில் வழக்குரைஞா் விஸ்வநாதன் மூலம் முனீஸ்வரன் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் காசோலை மோசடி செய்த மயில்சாமிக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ. 3 லட்சத்து 90 ஆயிரம் அபராதமும் விதித்து வால்பாறை நீதித் துறை நடுவா் ஆா். செந்தில்குமாா் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT