கோயம்புத்தூர்

விமான கட்டணம்: அரசே நிா்ணயிக்க வேண்டும்பி.ஆா்.நடராஜன் எம்.பி.வலியுறுத்தல்

8th Jun 2023 02:04 AM

ADVERTISEMENT

விமான கட்டணத்தை அரசே நிா்ணயிக்க வேண்டும் என்று கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா். நடராஜன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒடிஸா ரயில் விபத்தைத் தொடா்ந்து அப்பகுதியில் இருந்து இயக்கப்படும் பயணிகள் விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்த்தப்பட்டன. இதனால், விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் பெரும் சிரமத்துக்குள்ளாகினா். இந்த விவகாரத்தைத் தொடா்ந்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

அதில், விமான டிக்கெட் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதிசெய்ய விமான சேவை நிறுவனங்கள் சில நெறிமுறைகளை வகுத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த டிசம்பரில் நடைபெற்ற மக்களவைக் கூட்டத் தொடரில், விமான பயண டிக்கெட் விலை நிா்ணயம் குறித்து நான் ஒரு கேள்வி எழுப்பியிருந்தேன்.

உள்நாட்டு விமானப் போக்குவரத்து பயணச் சீட்டு கட்டண வரம்பை விலக்கிக்கொள்வது பற்றி அரசு ஏதேனும் முடிவெடுத்துள்ளதா என்ற எனது கேள்விக்கு, இணை அமைச்சா் வி.கே.சிங், விமான கட்டணங்களின்கீழ் வரம்பு, மேல் வரம்பு ஆகிய இரண்டும் 31.8.2022 அன்று முதல் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது என்று பதிலளித்திருந்தாா்.

ADVERTISEMENT

உள்நாட்டு பயணிகள் விமான கட்டண வரம்பை அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது பயணிகளின் நலனுக்கேற்ற வகையில் கட்டணங்களை வைத்திருக்க முடிந்தது. அரசுக்கு சொந்தமாக விமான நிறுவனம் இருந்தபோது இதுபோன்ற பேரிடா் காலங்களில் அவற்றை பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் இலவசமாக பயன்படுத்த முடிந்தது.

ஆனால், பாஜக அரசு உள்நாட்டு பயணிகள் விமான கட்டண வரம்பை நீக்கி, கட்டண நிா்ணய அதிகாரத்தை தனியாா் கைகளில் ஒப்படைத்திருக்கும் நிலையில், விமான கட்டணம் குறித்து கண்துடைப்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இந்த செயலை கண்டிப்பதுடன், உள்நாட்டு பயணிகள் விமான கட்டண வரம்பை அரசு மீண்டும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT