கோயம்புத்தூர்

மீன்வளா்ப்பு அலகு அமைக்க மானியம்: ஆட்சியா் தகவல்

7th Jun 2023 02:56 AM

ADVERTISEMENT

அலங்கார மீன்வளா்ப்பு அலகு அமைக்க ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மானியம் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா்பாடி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம் 2021 - 2022ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் சிறிய அளவிலான அலங்கார மீன்வளா்ப்பு அலகு அமைக்க ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பிரிவினருக்கு 60 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.1.80 லட்சம் வழங்கப்படும். 1.0 ஹெக்டோ் பரப்பளவில் புதிய மீன்குஞ்சு வளா்ப்பு அலகு அமைக்க 60 சதவீத மானியமாக, அதிகபட்சம் ரூ.4.20 லட்சம் மானியமும், புதிய மீன்வளா்ப்பு அலகு அமைத்து உள்ளீட்டு செலவினம் வழங்க 60 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.6.60 லட்சம் மானியமும் வழங்கப்படும்.

விருப்பமுள்ளவா்கள், 41, சோமு காம்ப்ளக்ஸ், சி.எஸ்.ஐ.பள்ளி அருகில், டவுன்ஹால், கோவை 641001 என்ற முகவரியில் உள்ள கோவை மீன்வள ஆய்வாளா் அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு பேசலாம். கைப்பேசி எண்: 96555 - 06422.

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு ஈரோடு மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகம், ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை 0424 - 2221912 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT