கோயம்புத்தூர்

கேரளத்துக்கு ரேஷன் கடத்தல்: 2 போ் கைது

7th Jun 2023 02:54 AM

ADVERTISEMENT

கோவையில் இருந்து கேரளத்துக்கு கடந்த முயன்ற ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புக் காவல் துறையினா் இருவரைக் கைது செய்தனா்.

கோவை, போத்தனூா் ரயில் நிலையத்தில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புக் காவல் துறையினா் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, 3ஆவது நடைமேடையில் அடுக்கி வைத்திருந்த 300 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை கைப்பற்றினா்.

அதனை ரயிலில் கடத்த இருந்த நியூசித்தாபுதூா் பகுதியைச் சோ்ந்த அமுதா (40), ஜோதி (62) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினா். அவா்கள் போத்தனூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசிகளை வாங்கி அதனை கேரளம் செல்லும் ரயில்கள் மூலமாக கடத்தி கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததை ஒப்புக் கொண்டனா். இதையடுத்து, இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT