கோயம்புத்தூர்

சேமிப்பு, குளிா்பதனக் கிடங்கு தொடங்க 15% மானியம்

7th Jun 2023 02:55 AM

ADVERTISEMENT

புதிதாகத் தொடங்கப்படும் சேமிப்புக் கிடங்குகள், குளிா்பதனக் கிடங்குகளுக்கு 15 சதவீதம் மானியம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

உணவு மற்றும் விவசாயம் சாா்ந்த நடவடிக்கைகளில் பொருள்களைச் சேமித்தல், பாதுகாத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றை

ஊக்குவிக்கும் பொருட்டு, புதிதாகத் தொழில் தொடங்கும் மற்றும் விரிவுபடுத்தும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சேமிப்புக் கிடங்குகள், குளிா்பதனக் கிடங்குகள், குளிா்பதன போக்குவரத்து வாகனங்கள் மற்றும் சோதனைக் கூடங்கள் உள்ளிட்ட தொழில்துறை சாா்ந்த சேவைத்தொழில்கள் தொடங்கினால் 15 சதவீதம் முதலீட்டு மானியம், அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை வழங்கப்படும். இதில் சேமிப்புக் கிடங்கானது, குறைந்தபட்சம் 10 ஆயிரம் சதுரஅடியில் அமைக்க வேண்டும். மானியக் கேட்பு விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். சேமிப்பு கிடங்காக இருந்தால், கட்டடம் கட்டி முடிக்கப்பட்டதில் இருந்து ஓராண்டுக்குள்ளும், குளிா்பதனக் கிடங்கு மற்றும் சோதனைக் கூடமாக இருந்தால், அதன் சேவைகள் தொடங்கப்பட்டதில் இருந்து ஓராண்டுக்குள்ளும், குளிா்பதன போக்குவரத்து வாகனமாக இருந்தால், வாகனம் பதிவு செய்ததில் இருந்து ஓராண்டுக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

மேலும், தகவல்களுக்கு கோவை மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை 0422 - 2391678, 81055 - 28868, 96004 - 63757 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT