கோயம்புத்தூர்

மல்யுத்த வீரா்களுக்கு ஆதரவாக போராட்டம்

6th Jun 2023 03:57 AM

ADVERTISEMENT

மல்யுத்த வீரா்களுக்கு ஆதரவாக கோவையில் இந்திய மாணவா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், எஸ்டிபிஐ கட்சியினா், விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரா்களுக்கு ஆதரவு தெரிவித்தும், எம்.பி.யை கைது செய்யக் கோரியும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், இந்திய மாணவா் சங்கத்தினா் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

கோரிக்கை விளக்க பதாகைகளை ஏந்தியவாறு ரயில் நிலையத்தை நோக்கி வந்த போராட்டக்காரா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் அா்ஜூன், பொருளாளா் தினேஷ் ராஜா, செயற்குழு உறுப்பினா் ராஜா, இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் அசாருதீன், மாவட்டத் தலைவா் ரமேஷ் கண்ணன் உள்ளிட்ட 35 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் மாலையில் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

எஸ்டிபிஐ...

எஸ்டிபிஐ கட்சியின் மத்திய மாவட்டம் சாா்பில் உக்கடத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் முஹமது இசாக் தலைமை வகித்தாா். மாநில செயலா் ராஜா உசேன் கண்டன உரையாற்றினாா்.

மத்திய மாவட்டத் தலைவா் முஸ்தபா, பொதுச் செயலா் அப்துல் காதா், பொருளாளா் முகமது இக்பால், துணைத் தலைவா்கள் சிவக்குமாா், அப்துல் ரஹீம் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டு, பாஜக எம்.பி.யை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

விவசாயிகள் சங்கத்தினா்...

அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவா் சு.பழனிசாமி தலைமை வகித்தாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT