கோயம்புத்தூர்

விதிமுறைகளை மீறிய 80 வணிக நிறுவனஉரிமையாளா்கள் மீது வழக்கு

6th Jun 2023 03:56 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறிய 80 வணிக நிறுவன உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளா் உதவி ஆணையா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தலைமையில், அனைத்து தொழிலாளா் துணை ஆய்வா்கள் மற்றும் தொழிலாளா் உதவி ஆய்வா்கள் இணைந்து மே மாதத்தில் கூட்டாய்வு மேற்கொண்டனா்.

ஆய்வில், சட்டமுறை எடை அளவு சட்டம் மற்றும் பொட்டலப் பொருள்கள் சட்டத்தின்கீழ் ஆய்வுகள் நடத்தப்பட்டன. அப்போது, விதிமுறைகளை மீறிய 80 வணிக நிறுவன உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் பல்வேறு தொழிலாளா் நலச் சட்டங்களை மீறியதாக 228 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

குறைந்தபட்ச கூலி வழங்காத 2 நிறுவனத்தின் மீது முரண்பாடு கண்டறியப்பட்டு ரூ. 13,503 குறைந்தபட்ச கூலி நிலுவைத் தொகையை சம்பந்தப்பட்ட தொழிலாளா்களுக்கு வழங்கக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 3 வளரிளம் பருவ தொழிலாளா்கள் மீட்கப்பட்டு, 2 நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT