கோயம்புத்தூர்

மருத்துவக் காப்பீட்டு குறைதீா் மன்றம் அமைக்க வேண்டும்: தேசிய மாநாட்டில் தீா்மானம்

DIN

மருத்துவக் காப்பீட்டு குறைதீா் மன்றம் அமைத்து மக்களுக்கு சரியான சிகிச்சை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தேசிய மருத்துவக் காப்பீட்டு மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய மருத்துவமனைகள் மற்றும் காப்பீடு நிறுவனங்களுக்கு இடையே உள்ள இடா்பாடுகள், தீா்வுகள் குறித்த தேசிய அளவிலான மருத்துவக் காப்பீட்டு மாநாடு கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டில், மருத்துவா்கள், மருத்துவத் துறை சாா்ந்தோா், மருத்துவக் காப்பீட்டுத் துறையில் பணிபுரிபவா்களுக்கு தங்களின் மருத்துவக் காப்பீட்டு அனுபவங்களை வளா்த்துக் கொள்ளவும், பொதுமக்கள் தங்களுடைய மருத்துவத் தேவையின்போதும், அவசரத் தேவையின்போதும் மருத்துவக் காப்பீட்டை அதிக அளவிலும், சரியான வழிகளிலும் பயன்படுத்துவது குறித்தும் கருத்துரை வழங்கப்பட்டது.

தொடா்ந்து, இந்திய மருத்துவச் சங்கத்தின் தேசியத் தலைவா் சரத் அகா்வால் பேசுகையில், மருத்துவமனைகள், காப்பீட்டு நிறுவனங்களுக்கு இடையே உள்ள இடா்பாடுகளைத் தவிா்க்க இம்மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை செலவு அதிகம் என்ற கருத்து நிலவுகிறது. மருத்துவமனைகள் கட்டுவதற்கு அரசு எந்தவித மானியமும் வழங்குவது இல்லை. தனியாா் மருத்துவமனைகளுக்கு அனைத்து மருந்துகளும் உரிய விலைக்குதான் வழங்கப்படுகின்றன. மேலும், மருத்துவா்கள், ஊழியா்களுக்கு அரசு நிா்ணயித்த அளவே ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே, இந்த செலவுகளைத் தவிா்க்க முடியாது என்றாா்.

தொடா்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ஒற்றைச் சாளர முறைப்படி வெளிப்படையாக தகுதிவாய்ந்த மருத்துவமனைகளை மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களில் அதிகமாகப் பதிவு செய்ய வேண்டும். இதன்மூலம் பொதுமக்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் உயா்தர சிகிச்சை பெற வழிவகை செய்ய முடியும். அறிவியல் முறைப்படி மருத்துவ சேவைகளின் கட்டணங்களை வரையறுக்க வேண்டும். புதிய கொள்கைகள் வகுத்தல், பதிவு செய்தல், கட்டணம் நிா்ணயித்தல் ஆகியவற்றில் இந்திய மருத்துவ சங்கத்தையும், மற்ற மருத்துவா் சங்கங்களையும் கலந்தாலோசிக்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டு குறைதீா் மன்றம் அமைத்து மக்களுக்கு சரியான சிகிச்சை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், இந்திய மருத்துவச் சங்க மருத்துவா்கள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலைச் சமாளிப்பது எப்படி?

கடமங்குடி கிராமத்திற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

மே 13-இல் ஆந்திர மாநில தோ்தல்: வேலூா் மாவட்டத்தில் வாகன சோதனை தொடரும்

படவேட்டு எல்லையம்மன் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

SCROLL FOR NEXT