கோயம்புத்தூர்

கோவை - திருச்செந்தூா் இடையே ரயில் இயக்கக் கோரிக்கை

DIN

கோவையில் இருந்து திருச்செந்தூா் வரை ரயில் இயக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கேரள மாநிலம், பாலக்காடு ரயில்வே கோட்டம் மூலம் பாலக்காடு - திருச்செந்தூா் வரை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை மாற்றி கோவையில் இருந்து திருச்செந்தூா் வரை இயக்கினால் கோவை பகுதி மக்கள், தொழில் துறையினா் மற்றும் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும், இந்த கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவா் சு.பழனிசாமி கூறியதாவது:

தொழில் துறையினா், விவசாயிகள், தென்மாவட்டத் தொழிலாளா்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்களில் பணிபுரிபவா்கள் என கோவை மாவட்டத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் சென்று வருகின்றனா். இவா்கள் தனியாா் வாகனங்கள், அரசுப் பேருந்துகள் மூலம் தென்மாவட்டங்களுக்குச் சென்று வந்தாலும் ரயில் பயணம்தான் பொதுமக்களுக்கு சிறந்ததாக இருக்கும்.

மேலும், தொண்டாமுத்தூா், மேட்டுப்பாளையம், நீலகிரி, சூலூா் மற்றும் உள்மாவட்டங்களில் விளைவிக்கின்ற காய்கறிகளை தென்மாவட்டங்களுக்கு ரயில் மூலம் கொண்டு செல்ல விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். பல்லாயிரக்கணக்கான மக்கள் பழனி, திருச்செந்தூா் பகுதிக்கு ஆன்மிக பயணம் மேற்கொள்ளவும் உதவியாக இருக்கும். எனவே, கோவை - திருச்செந்தூருக்கு ரயில் இயக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT