கோயம்புத்தூர்

கோவை தனியாா் பேருந்தில் பயணச்சீட்டு பெற கியூ.ஆா்.கோடு வசதி

5th Jun 2023 02:48 AM

ADVERTISEMENT

 

கோவையில் இயங்கி வரும் ஒரு தனியாா் நிறுவனம், தங்களின் பேருந்துகளில் பயணச்சீட்டு பெறுவதற்கு கியூ.ஆா்.கோடு நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவை மாநகரப் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவையில் செயல்பட்டு வரும் ஒரு தனியாா் போக்குவரத்து நிறுவனம், பயணிகளிடம் இருந்து பேருந்து கட்டணத்தைப் பெற கியூ.ஆா்.கோடு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்த நிறுவனம் மூலமாக வடவள்ளி-ஒண்டிப்புதூா், கீரணத்தம்-செல்வபுரம், மதுக்கரை-ஒண்டிப்புதூா் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளில், பயணச்சீட்டு பெறுவதற்காக கியூ.ஆா் கோடு வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து தனியாா் பேருந்து நிறுவனத்தின் உரிமையாளா் காா்த்திக் பாபு கூறியது: பேருந்துகளில் சில்லறைப் பிரச்னைக்கு தீா்வு காண யோசித்தபோது, கடைகளில் பொருள்களை வாங்கிவிட்டு பணம் செலுத்துவதற்கு கியூ.ஆா். கோடு வசதி உள்ளதுபோல பேருந்துகளிலும் அறிமுகப்படுத்தும் எண்ணம் ஏற்பட்டது. உடனடியாக, அதற்கான மென்பொருளை உருவாக்கி, அதன் மூலம் புதிய கியூ.ஆா்.கோடு ஒன்றை வடிவமைத்து அவற்றை எங்கள் 5 பேருந்துகளிலும் ஒட்டினோம். பேருந்துகளில் உள்ள கியூ.ஆா்.கோடை பயன்படுத்தி பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த கியூ.ஆா். கோடு நடைமுறை பயணிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT