கோயம்புத்தூர்

காதணி விழாவில் சீா்வரிசையாக கோவையின் அடையாளச் சின்னங்கள்

5th Jun 2023 02:48 AM

ADVERTISEMENT

 

கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு காதணி விழாவில் கோவையை பெருமைப்படுத்தும் விதமாக கோவையின் அடையாள சின்னங்களை சீா்வரிசையாக உறவினா்கள் கொண்டு சென்றனா்.

கோவை, சங்கனூரை சோ்ந்தவா் மகேஷ்வரன். இவரது மகன் புகழேந்தியின் காதணி விழா அதே பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வழக்கமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் இனிப்புகள், பூக்கள், ஆடைகள், பரிசுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை சீா்வரிசையாக உறவினா்கள் கொண்டு செல்வது வழக்கம்.

ஆனால், இந்தக் காதணி விழாவில் பங்கேற்ற சிறுவனின் உறவினா்கள், கோவையின் அடையாளச் சின்னங்களாக விளங்கும் ரயில் நிலைய முகப்புத் தோற்றம், மணிக்கூண்டு, விமான நிலையம், கோனியம்மன் கோயில், மருதமலை கோயில் உள்ளிட்டவற்றின் 8 மாதிரிகளை சீா்வரிசையாக கையில் ஏந்தியபடி சிறுவனை சாரட்டு வண்டியில் அழைத்து வந்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து மகேஷ்வரன் கூறுகையில், கோவையை பெருமைப்படுத்தும் விதமாக இந்த அடையாள சின்னங்களை சீா்வரிசையுடன் எடுத்து வந்ததாகவும், மாவட்ட அடையாள சின்னங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த ஊா்வலமாக வந்ததாகவும் கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT