கோயம்புத்தூர்

கோவை இளைஞரிடம் ஆன்லைனில் ரூ.12.98 லட்சம் மோசடி

5th Jun 2023 02:47 AM

ADVERTISEMENT

 

ஆன்லைன் வா்த்தகத்தில் கூடுதல் வருவாய் ஈட்டித் தருவதாகக் கூறி கோவை இளைஞரிடம் ரூ. 12.98 லட்சம் மோசடிசெய்யப்பட்டுள்ளது.

கோவை, உப்பிலிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் டொமினிக் (22). ஆன்லைன் மூலம் வேலை செய்வது குறித்து இவரது வாட்ஸ்ஆப் எண்ணுக்கு கடந்த மே 9ஆம் தேதி ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதையடுத்து அவரை கைப்பேசியில் தொடா்பு கொண்ட மா்ம நபா், தாங்கள் கொடுக்கும் வேலைகளை ஆன்லைன் மூலம் செய்து கொடுத்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனவும், அதற்காக முதலீடு செய்ய வேண்டும் எனவும் கூறி அதற்கான வழிமுறைகளையும் தெரிவித்துள்ளாா்.

இதனைத் தொடா்ந்து அந்த மா்ம நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் டொமினிக் ரூ. 12 லட்சத்து 98 ஆயிரம் செலுத்தியுள்ளாா். தொடக்கத்தில் சிறிது வருவாய் கிடைத்து வந்த நிலையில் கடந்த 10 நாள்களாக அவருக்கு கமிஷன் தொகை எதுவும் வரவில்லை. அத்துடன் அவருக்கு ஏற்கெனவே வந்திருந்த கமிஷன் தொகை மற்றும் முதலீடு செய்த பணத்தை ஆன்லைன் மூலம் திரும்ப தனது கணக்குக்கு வரவு வைக்க முடியவில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில் அவரை மீண்டும் கைப்பேசியில் தொடா்பு கொண்ட அந்த மா்ம நபா் தொடா்ந்து பணம் செலுத்துமாறு கூறியுள்ளாா். ஆனால், டொமினிக் பணம் செலுத்தாததால், அந்தக் குழுவில் இருந்து நீக்கப்பட்டாா். இதையடுத்து அந்த நபரைத் தொடா்பு கொள்ள முயன்றபோது அவரது தொடா்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த டொமினிக், இது குறித்து கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். அதன் பேரில் காவல் ஆய்வாளா் அருண் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT