கோயம்புத்தூர்

பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்றமாணவ, மாணவிகளுக்குப் பரிசளிப்பு விழா

5th Jun 2023 02:49 AM

ADVERTISEMENT

 

டாக்டா் அம்பேத்கா் கல்வி, சமூக வளா்ச்சி அறக்கட்டளை சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலப் பள்ளியில் பயின்று பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, இளைஞா் வழிகாட்டும் பணி மாநிலத் தலைவா் பெருமாள் தலைமை வகித்தாா். முன்னாள் மாநில ஆதிதிராவிடா் நலக்குழு உறுப்பினா் எஸ்.செல்வகுமாா் வரவேற்றாா். தேசிய ஆதிதிராவிடா் ஆணையம் முதுநிலை ஆய்வு அலுவலா் எஸ்.லிஸ்டா், துணை ஆட்சியா் பி.சுரேஷ், சிபிஎம் கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் சிங்காரவேலு ஆகியோா், பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டிப் பரிசளித்தனா். தொடா்ந்து, விடுதி காப்பாளா்களைப் பாராட்டி சால்வை அணிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி அடிப்படை ஊழியா்கள், அலுவலா்கள் சங்கச் செயலாளா் கோவை கபீா், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக அலுவலா் சி.காமராஜ், பாரதியாா் பல்கலைக்கழகப் பேராசிரியா் சுரேஷ்பாபு, அரசு எஸ்சி, எஸ்டி அலுவலா் சங்க மாவட்டச் செயலாளா் வேல்முருகன், தனி வட்டாட்சியா் மாலதி, விடுதி காப்பாளா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT