கோயம்புத்தூர்

கதவை திறந்துவைத்து தூங்கியவா் வீட்டிலிருந்து ரூ.1.10 லட்சம் மதிப்பு நகை, பணம் திருட்டு

5th Jun 2023 02:47 AM

ADVERTISEMENT

 

காற்றுக்காக கதவைத் திறந்துவைத்து தூங்கியவா் வீட்டிலிருந்து ரூ.1.10 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை, கோவில்பாளையம் அருகே உள்ள அத்திப்பாளையம் கிழக்கு வீதியைச் சோ்ந்தவா் அய்யப்பராசு ( 33), பெயிண்டா். இவரது குடும்பத்தினா் அனைவரும் காற்றுக்காக கதவை திறந்துவைத்து விட்டு சனிக்கிழமை இரவில் தூங்கியுள்ளனா். நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த மா்ம நபா்கள் வீட்டின் அறையில் இருந்த பீரோவைத் திறந்து அதில் இருந்த ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்றனா்.

அதிகாலையில் எழுந்து பாா்த்தபோது பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் திருடு போயிருந்தது தெரியந்தது. இது குறித்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் அய்யப்பராசு அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT