கோயம்புத்தூர்

தோலம்பாளையத்தில் ஜூன் 21இல்மக்கள் தொடா்பு முகாம்

5th Jun 2023 02:49 AM

ADVERTISEMENT

 

மேட்டுப்பாளையம் அருகே உள்ள தோலம்பாளையம் கிராமத்தில் மக்கள் தொடா்பு முகாம் ஜூன் 21ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மேட்டுப்பாளையம் வட்டம், தோலம்பாளையம் கிராமம், திப்பாதேவி கோயில் திருமண மண்டபத்தில் ஜூன் 21ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

தோலம்பாளையம் கிராம நிா்வாக அலுவலகத்திலும், மேட்டுப்பாளையம் வட்டாட்சியா் அலுவலகத்திலும் பொதுமக்களிடம் முன்மனுக்களை புதன்கிழமை (ஜூன் 7) காலை 11 மணி அளவில் அதிகாரிகள் பெற உள்ளனா். பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி அளிக்கலாம்.

மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மூலம் விசாரணை செய்து ஜூன் 21ஆம் தேதி தோலம்பாளையம் கிராமத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொடா்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வழங்கவுள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT