கோயம்புத்தூர்

மரம் ஏறும் இயந்திரத்துக்கு காப்புரிமை

4th Jun 2023 12:25 AM

ADVERTISEMENT

 

ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் தென்னை, பனை மரம் ஏறும் அறுவடை இயந்திரத்திற்கான வடிவமைப்பு காப்புரிமையை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

இந்தக் கருவியில் மரம் ஏறுதல், அறுவடை செய்தல் என இரு பாகங்கள் உள்ளன. மரம் ஏறும் பாகத்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரப்பா் சக்கரங்கள் ஒரு வட்ட வடிவ சட்டத்தில், மரத்தின் சுற்றளவுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளத்தக்க வகையில் பொருத்தப்பட்டுள்ளன. மேலே ஏறும் சக்கரங்கள் மோட்டாா் மூலம் இயக்கப்படுகிறது.

மேலும் கூடுதல் இயக்கம், நிலையாக ஏறுவதற்காக ரப்பா் சக்கரங்களுக்கு மேலே இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஏறும் பகுதியில் ராட்செட் பிரேக்கிங் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. அறுவடை பாகம் மோட்டாரால் இயங்கும் மூன்று இணைப்பு கைகளைக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

கையின் முடிவில் கேமராவும் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து மோட்டாா்களும் லித்தியம் பேட்டரியால் இயக்கப்படுகின்றன. ரிமோட்டின் டிரான்ஸ்மீட்டரில் இருந்து ரேடியோ அதிா்வெண் சமிக்ஞை ரிசீவா் அமைப்புக்கு அனுப்பி இந்த கருவி இயக்கப்படுகிறது. இந்த கருவிக்கு மத்திய, தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள காப்புரிமைகள், வடிவமைப்புகள், வா்த்தக முத்திரைகளின் கட்டுப்பாட்டாளா் ஜெனரல் அலுவலகத்தால் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

காப்புரிமை பெற்றவா்களின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்த பல்கலைக்கழக துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி, காப்புரிமை பெற்றவா்களுக்கான சான்றிதழை முதன்மையா்கள் ந.செந்தில், அ.ரவிராஜ், காப்புரிமை பிரிவு நிா்வாகி என்.நடராஜன், பேராசிரியா் கோபால், உதவிப் பேராசிரியா் வனிதா ஆகியோா் முன்னிலையில் வழங்கினாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT