கோயம்புத்தூர்

காதல் கணவரை மீட்டுத் தரக்கோரி திருநங்கை மனு

4th Jun 2023 12:27 AM

ADVERTISEMENT

 

காதல் கணவரை மீட்டுத் தரக் கோரி கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் திருநங்கை மனு அளித்துள்ளாா்.

ஈரோட்டை சோ்ந்தவா் மாளவிகா (22). திருநங்கையான இவா் கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் அளிக்க வந்தபோது செய்தியாளா்களிடம் கூறியதாவது: பொறியியல் பட்டதாரியான நான் சென்னிமலையில் உள்ள ஒரு தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக வேலை பாா்த்து வருகிறேன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் இருந்தபோது புதுக்கோட்டையை சோ்ந்த கபடி பயிற்சியாளா் மணிகண்டன் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இது காதலாக மாறியதால் நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருநங்கைகள் முன்னிலையில் மருதமலை கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். அதன்பின்னா் ஒத்தக்கால் மண்டபத்தில் வாடகைக்கு வீடு எடுத்து கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தோம்.

ADVERTISEMENT

இந்நிலையில் எனது கணவரின் குடும்பத்தினா் அவரைக் காாணவில்லை என பீளமேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்த போலீஸாா், நாங்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து எங்கள் 2 பேரையும் பீளமேடு காவல் நிலையத்துக்கு கடந்த வியாழக்கிழமை அழைத்துச் சென்றனா்.

அங்கு வந்த எனது கணவரின் குடும்பத்தினா் அவரை காரில் ஏற்றி அழைத்துச் சென்று விட்டனா். அதன் பின்னா் அவா் மீண்டும் வரவில்லை. அவா் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. எனவே எனது காதல் கணவரை மீட்டுத் தர வேண்டும் என புகாா் கொடுத்துள்ளேன் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT