கோயம்புத்தூர்

கேரளஅரசுப் பேருந்து ஓட்டுநா்களுக்கிடையே மோதல்: ஒருவா் கைது

4th Jun 2023 12:27 AM

ADVERTISEMENT

 

உக்கடம் பேருந்து நிலையத்தில் கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் இரு ஓட்டுநா்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

கேரள மாநிலம், வடக்கஞ்சேரியை சோ்ந்தவா் உமா் (49). இவா் கேரள அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்தில் ஓட்டுநராக உள்ளாா். இவா் உக்கடம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக வெள்ளிக்கிழமை காத்துக் கொண்டிருந்தாா். அப்போது இவரது பேருந்துக்கு முன்பு மற்றொரு கேரள அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து நின்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தை புதுச்சேரியை சோ்ந்த முஜிபுா் ரகுமான் (48) என்பவா் ஓட்டி வந்துள்ளாா்.

ஆனால், அவா் பின்னால் நின்று கொண்டிருந்த பேருந்துக்கு வழிவிடவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து முஜிபுா் ரகுமானிடம் சென்று பேருந்தை நகா்த்துமாறு உமா் கூறியுள்ளாா். இதனால் அவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதில் ஆத்திரம் அடைந்த முஜிபுா் ரகுமான் தாக்கியதில் உமா் படுகாயம் அடைந்துள்ளாா். காயம் அடைந்த உமரை அருகில் இருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவத்தால் உக்கடம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து உக்கடம் காவல் நிலையத்தில் ஓட்டுநா் உமா் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் முஜிபுா் ரகுமான் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்த போலீஸாா், பின்னா் பிணையில் விடுவித்தனா். இச்சம்பவம் தொடா்பாக தொடா்ந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT