கோயம்புத்தூர்

மடாதிபதிகள் மீது பேஸ்புக்கில் அவதூறு:மாநகர காவல் ஆணையரிடம் வி.ஹெச்.பி. புகாா்

4th Jun 2023 12:27 AM

ADVERTISEMENT

 

செங்கோல் விவகாரம் தொடா்பாக மடாதிபதிகள் மீது அவதூறு பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகாா் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கோவை மாநகர காவல் ஆணையரிடம், கோவை மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவா் எஸ்.குமரேசன் கொடுத்துள்ள புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் அறநிலையத் துறை உறுப்பினரான பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், சரவணம்பட்டி சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆதீனங்களையும், சோழா்களின் செங்கோலைப் பெற்றுக் கொண்ட பிரதமா் மோடியையும் கடந்த மே 28 ஆம் தேதி பேஸ்புக்கில் அவதூறாகப் பதிவிட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இது ஹிந்து விரோதிகளின் செயலாகும். எனவே, அவமானப்படுத்தும் நோக்கில் பதிவிட்ட கோவையில் வசிப்பதாக பேஸ்புக்கில் கூறியுள்ள பாலசுப்பிரமணிய ஆதித்யன் மற்றும் மேலும் இரண்டு பேரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து அவா்களது பேஸ்புக் கணக்கையும் தடை செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT