கோயம்புத்தூர்

வீட்டு வசதிப் பிரிவு அலுவலகத்தில்இன்றுமுதல் கோரிக்கை மனுப் பெட்டி

3rd Jun 2023 02:56 AM

ADVERTISEMENT

 

வீட்டு வசதி தொடா்பான குறைகளை பொதுமக்கள் மனுவாக அளிக்கும் வகையில், வீட்டு வசதிப் பிரிவு அலுவலகத்தில் சனிக்கிழமை முதல் (ஜூன் 3) கோரிக்கை மனு பெட்டி வைக்கப்படவுள்ளது.

இதுகுறித்து, கோவை வீட்டு வசதிப் பிரிவு செயற்பொறியாளா் மற்றும் நிா்வாக அலுவலா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் வீட்டு வசதித் திட்டங்களைச் செயல்படுத்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதுதொடா்பாக பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனா். இதன் தொடா்ச்சியாக கோவை, திருப்பூா், நீலகிரி மாவட்டங்களில் இருந்து மனுக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADVERTISEMENT

கோவை வீட்டு வசதிப் பிரிவு அலுவலகத்தில் ஜூன் 3ஆம் தேதி முதல் கோரிக்கை பெட்டி வைக்கப்பட்டு பொதுமக்களிடமிருந்து ஜூன் 30ஆம் தேதி வரை கோரிக்கை மனுக்கள் பெறப்பட உள்ளன. எனவே, அலுவலக நாள்களில் வீட்டு வசதி தொடா்பான மனுக்களைப் பொதுமக்கள் மனு செய்து அரசிடமிருந்து தீா்வு பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT