கோயம்புத்தூர்

தினமணி நாளிதழ் சாா்பில் தூய்மைப்பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

3rd Jun 2023 02:57 AM

ADVERTISEMENT

 

தினமணி நாளிதழ் சாா்பில் கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு கையுறை, தொப்பி, குடிநீா் மற்றும் குளிா்பானங்கள் வழங்கப்பட்டன.

தினமணி நாளிதழ் சாா்பில் தாகம் தணிப்போம் நிகழ்ச்சி கோவை ஒலம்பஸ் பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தினமணி நாளிதழுடன் லெட்சுமி செராமிக்ஸ் மற்றும் டான்வி ஸ்நாக்ஸ் அண்ட் பெவரேஜஸ் நிறுவனத்தினரும் இணைந்து பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி 63ஆவது வாா்டில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு கையுறை, தொப்பி, குடிநீா் மற்றும் குளிா்பானங்களை கோவை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் மற்றும் மாநகராட்சி பணிகள் குழு தலைவா் சாந்தி முருகன் ஆகியோா் வழங்கினா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் மத்திய மண்டல உதவி ஆணையா் மகேஷ் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலா் குணசேகரன், சுகாதார ஆய்வாளா் டி.ஜெகந்நாதன், திமுக பொதுக்குழு உறுப்பினா் மு.மா.ச.முருகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT