கோயம்புத்தூர்

சூலூா் விமானப்படை தளபழுதுபாா்க்கும் பிரிவுக்குபுதிய அதிகாரி நியமனம்

3rd Jun 2023 02:52 AM

ADVERTISEMENT

 

கோவை மாவட்டம் சூலூா் விமானப்படை தளத்தில் செயல்படும் 5 ஆவது பழுதுபாா்க்கும் பிரிவின் புதிய தலைமை அதிகாரியாக விஷ்ணு கௌா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

சூலுா் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படையின் பழுதுபாா்க்கும் பிரிவு செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அதிகாரியாக ஏா் கமோடா் சஞ்சீப் இருந்து வந்தாா். தற்போது அவருக்கு பதிலாக விஷ்ணு கௌா் நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

விமானப்படையில் 33 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டுள்ள இவா், விமானப்படை தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தின் கட்டளை அதிகாரி, தலைமை பொறியியல் அதிகாரி உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளாா். மேலும் தில்லி தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளா்களின் துணைத் தலைவராக (நிதித் திட்டமிடல்) இருந்ததாக விமானப்படை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT