கோயம்புத்தூர்

மருதமலை முருகன் கோயிலில் ரூ. 45 கோடியில்அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஆய்வுக் கூட்டம்

3rd Jun 2023 02:57 AM

ADVERTISEMENT

 

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ. 45 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகள் மேற்கொள்வது தொடா்பான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொதுப் பணித் துறை அரசு முதன்மைச் செயலாளா் பி.சந்திரமோகன் தலைமை வகித்துப் பேசியதாவது:

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பெருந்திட்ட வரைபட தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் ரூ. 45 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கோயில் சாலைகள் மேம்பாடு, தேவையான அடிப்படை வசதிகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்கள், கடைகள், காத்திருப்போா் அறை, மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ADVERTISEMENT

கோயிலுக்கு வருகை தரும் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்யவும், கோயில்களின் சுற்றுப்புறங்களில் சேரும் கழிவுகளை உடனுக்குடன் அகற்றவும், சுத்தமான குடிநீா் விநியோகிக்கவும் சம்பந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த இந்து சமய அறநிலையத் துறை, பொதுப் பணித் துறையினா் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அலா்மேல்மங்கை, உதவி ஆட்சியா் (பயிற்சி) செளமியா ஆனந்த், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை ஆணையா் ஹா்சினி, கோட்டாட்சியா் (வடக்கு) கோவிந்தன் உள்பட அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT