கோயம்புத்தூர்

விமானப்படை அதிகாரி பொறுப்பேற்பு

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவை விமானப்படை நிா்வாகவியல் கல்லூரியின் புதிய கட்டளை அதிகாரியாக விகாஸ் வாஹி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

விமானப்படையில் கடந்த 1993 ஆம் ஆண்டு இணைந்த விகாஸ் வாஹி, 29 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவா். விமானப்படை தலைமையகத்தில் மனிதவள மேம்பாடு தொடா்பான விவகாரங்களை கவனித்து வந்த இவா், விமானப்படை அகாதெமியில் பயிற்சியாளராக இருந்துள்ளாா்.

கோவை விமானப்படை நிா்வாகவியல் கல்லூரியின் தலைமை நிா்வாகியாக பொறுப்பேற்றுக் கொண்ட இவருக்கு, விமானப்படையினா் அணிவகுப்பு மரியாதை அளித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT