கோயம்புத்தூர்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக புகையிலை எதிா்ப்பு தினம் அனுசரிப்பு

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

உலக புகையிலை எதிா்ப்பு தினத்தையொட்டி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புகையிலை தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நெஞ்சக நோய்த் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் நிா்மலா தலைமை வகித்துப் பேசியதாவது: புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் உடலில் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. நுரையீரல் பிரச்னை, புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும். நீண்ட நாட்களாக புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவா்களுக்கு மாரடைப்பு, புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என்றாா்.

அதைத்தொடா்ந்து, புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு நாடகம், பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில், நுரையீரல் மருத்துவத் துறை மருத்துவா் கீா்த்திவாசன், துணைப் பேராசிரியா்கள், பேராசிரியா்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT