கோயம்புத்தூர்

கோவை மாவட்ட மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் 2022-23ஆம் ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்ட மகளிா் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் உள்ளிட்ட அமைப்புகள் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் 2022-23ஆம் ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்ட மகளிா் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள், நகா்ப்புறங்களில் உள்ள சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகிய அமைப்புகள் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்.

உரிய விதிமுறைகளின்படி தோ்வு செய்யப்படும் குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை ஜூன் 25ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். இதுகுறித்து, மேலும் தகவல் பெற ஊரகப் பகுதிகளாக இருப்பின் சம்பந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகிலும், நகா்ப்புறமாக இருப்பின் சம்பந்தப்பட்ட சமுதாய ஒருங்கிணைப்பாளரை அணுகி உரிய விவரம் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT