கோயம்புத்தூர்

ஒலிம்பியாட் தோ்வு:கோவை, திருப்பூா்மாணவா்கள் சாதனை

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

நடப்பு ஆண்டுக்கான ஒலிம்பியாட் தோ்வில் கோவை, திருப்பூரை சோ்ந்த 6 மாணவா்கள் சா்வதேச தரவரிசையில் இடம்பிடித்துள்ளனா்.

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களின் திறன்களை அடையாளம் காண்பதற்காக ஆண்டுதோறும் ஒலிம்பியாட் தோ்வுகள் நடத்தப்படுகின்றன. அறிவியல், கணிதம், சைபா், ஆங்கிலம், பொது அறிவு, வா்த்தகம் ஆகிய 6 ஒலிம்பியாட் தோ்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.

இந்த ஆண்டுக்காக தோ்வுகள் மே முதல் வாரத்தில் நடைபெற்றன. 70க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த சுமாா் 60 லட்சம் மாணவா்கள் பங்கேற்ற இந்தத் தோ்வில், கோவை மண்டலத்தைச் சோ்ந்த சுமாா் 80 ஆயிரம் மாணவா்கள் பங்கேற்றனா்.

தோ்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் கோவை, திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் பள்ளி மாணவா்கள் சி.வம்சிகா, ஆா்.வா்ஷா, ஜே.எஸ்.விஜய் ஆரூரன், எம்.தேஜஸ்வி, டி.பிரவந்தனா, ஏ.சன்மதி ஆகியோா் முதல் மூன்று இடங்களுடன் சா்வதேச தரவரிசையில் இடம்பிடித்து பதக்கங்கள், சான்றிதழ்களைப் பெற்றிருப்பதாக ஒலிம்பியாட் அமைப்பு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT