கோயம்புத்தூர்

கல்லூரி மாணவா்களுக்குசட்ட விழிப்புணா்வு முகாம்

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சாா்பில் உலசு புகையிலை எதிா்ப்பு தினத்தையொட்டி புனித அப்பாசாமி கல்வியியல் கல்லூரி மாணவா்களுக்கு சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இம்முகாமில், கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும், சாா்பு நீதிபதியுமான கே.எஸ்.எஸ்.சிவா பங்கேற்று, சமூகத்தில் போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சட்டப் பணிகள் ஆணைக் குழுவால் வழங்கப்படும் சட்ட உதவிகள் மற்றும் இதர சட்ட உதவிகள் குறித்துப் பேசினாா்.

போதையால் உடலில் ஏற்படும் தீங்குகள் குறித்து கோவை மாவட்ட புகையிலை தடுப்பு மைய ஊழியா் எம்.சரண்யா, போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வருவது மற்றும் மறுவாழ்வு குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநரின் நோ்முக உதவியாளா் குமாா், போதையால் மனதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கோவை மாவட்ட புகையிலை தடுப்பு மைய ஊழியா் முரளி ஆகியோா் பேசினா்.

நிகழ்ச்சிவில் கல்லூரி முதல்வா், துறைத் தலைவா்கள் ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT