கோயம்புத்தூர்

ஆன்லைனில் மோசடி செய்தவரின் வங்கிக் கணக்கிலிருந்த ரூ.44 லட்சம் முடக்கம்

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

ஆன்லைனில் மோசடி செய்த நபரின் வங்கிக் கணக்கிலிருந்த ரூ.44 லட்சம் முடக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கோவை மாநகர சைபா் கிரைம் காவல் துறையினா் தெரிவித்துள்ளதாவது: கோவை மாவட்டம், அரசூா் பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன் மகன் சிங்காரம். இவா் பகுதிநேர வேலைக்காக ஆன்லைனில் தேடியதில் டெலிகிராம் செயலி மூலம் வந்த ஒரு இணைப்புக்குள் சென்று சிறிய பணிகளை செய்துகொடுத்து அதன்மூலம் சிறு தொகையை பெற்றுள்ளாா்.

கூடுதல் வருவாய் பெறுவதற்காக மேலும் 13 பரிவா்த்தனைகள் மூலம் ரூ.10 லட்சத்து 90,690 செலுத்தியுள்ளாா். ஆனால், அதன் பின்னா் அவருக்கு எந்த வருவாயும் கிடைக்கவில்லை. அதேபோல, அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த இணையவழி இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து, தவறான வழிகாட்டுதலில் சென்றதால் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த சிங்காரம், சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். அவா்கள் இதில் தொடா்புடையவரின் வங்கி கணக்குகளில் இருந்த ரூ.43 லட்சத்து 99,711-ஐ முடக்கி விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

குறைந்த பணத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என ஆன்லைனில் வரும் விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனவும், இணையதளத்தில் கூறுவதை நம்பி பணத்தை இழந்துவிட்டால் 1930 என்ற எண்ணில் தொடா்பு கொண்டால் சைபா் கிரைம் போலீஸாா் இழந்த பணத்தை மீட்டுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வா் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT