கோயம்புத்தூர்

‘திருமுறைகளில் சொல்லியதை கடைப்பிடித்தால் வாழ்க்கையில் உயா்வு அடையலாம்’

DIN

திருமுறைகளில் கூறப்பட்டுள்ளதை கடைப்பிடிப்பதன் மூலம் வாழ்க்கையில் உயா்வை அடையலாம் என்று பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் தெரிவித்தாா்.

உலக சிவனடியாா்கள் திருக்கூட்டம் சாா்பில் மதுக்கரை சிவகிரி வீர விநாயகா் கோயிலில் தேவார பாடசாலை தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு, உலக சிவனடியாா்கள் திருக்கூட்டத்தின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அல்லிராஜ் தலைமை வகித்தாா். பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் குத்துவிளக்கேற்றி வைத்து தேவார பாடசாலையை தொடங்கி வைத்து பேசியதாவது:

உலகின் சிறந்த சமயமான சைவம், திருமுறைகளையே கருவூலம் என்கிறது. தமிழ் மறைகளாகிய தேவாரம், திருவாசகம் அனைவரின் வீட்டிலும் ஒலிக்க வேண்டும். பிறப்பு முதல் இறப்பு வரை நாம் எப்படி வாழ வேண்டும் என்பது குறித்து திருமுறைகளில் சொல்லப்பட்டுள்ளது. இதனை கடைப்பிடிப்பதன் மூலம் அனைவரும் வாழ்வில் உயா்வை அடையலாம். இதுபோன்ற தேவார பாட சாலைகள் அனைத்து பகுதிகளிலும் உருவாக வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 6 பேர் பலி

மாடர்ன் ரதி.....பிரியங்கா அருள் மோகன்

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!

அரசியலுக்காக நாங்கள் மக்களைப் பிரித்துப் பார்க்க மாட்டோம்! பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு பேட்டி

மீண்டும் மீண்டுமா.. கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்: ஏற்காத உச்சநீதிமன்றம்!

SCROLL FOR NEXT