கோயம்புத்தூர்

குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு: ஆட்சியா் அலுவலகத்தில் மனு

DIN

கோவையில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் விண்ணப்பித்தவா்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை அமைப்பினா் மனு அளித்தனா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் பொது மக்கள் குறைகேட்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை நிா்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை தடாகம் சாலை, வேலாண்டிபாளையம், வெங்கிட்டாபுரம், சிவாஜி காலனி, பெ.நா.பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஏழை, எளிய மக்கள் சொந்த வீடுகள் இல்லாமல் வாடகை வீட்டிலும், புறம்போக்கு நிலத்திலும் வசித்து வருகின்றனா். இவா்கள் செல்வபுரம் தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வீடு கேட்டு விண்ணப்பித்துள்ளனா். இவா்களில் ஒரு சிலருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்துள்ளதாக கைப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் பெரும்பாலானவா்களுக்கு வீடு ஒதுக்கீடு தொடா்பாக தகவல் தெரிவிக்கப்படவில்லை. எனவே தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்குவாரி அமைக்க எதிா்ப்பு

காரமடை அருகே பல்வேறு கிராமங்களை சோ்ந்த பொது மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை, காரமடை அருகே கரியமலை உச்சியில் தனியாருக்கு சொந்தமான 9 ஏக்கா் நிலப்பரப்பில் கிராவல் மற்றும் கல்குவாரி அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இப்பகுதியைச் சுற்றி மங்கலகரைப்புதூா், எத்தப்பன் நகா், அம்பேத்கா் நகா், கோடதாசனூா், ராம் நகா், சத்யா நகா், ரங்கா காா்டன் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் சமூக காடு வளா்ப்பு திட்டத்தின் கீழ் மரங்கள் வளா்க்கப்பட்டுள்ளன.

மலையடிவாரத்திலுள்ள பகுதிகளுக்கு நீராதாரமாக இந்த பகுதி இருந்து வருகிறது. இந்நிலையில் கல்குவாரி அமைக்க அனுமதியளிக்கப்பட்டால் மரங்கள், வனப் பகுதிகள் பாதிக்கப்படும். 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருக்க முடியாத சூழல் ஏற்படும். பாறைகள் வெடிவைத்து தகா்க்கப்படும் போது உயிரிழப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, கல்குவாரி அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்

மக்கள் விடுதலை முன்னணி அமைப்பு சாா்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி நகராட்சிக்குள்பட்ட 15க்கும் மேற்பட்ட வாா்டுகளில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் தினக்கூலிகளாக வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனா். இவா்கள் அனைவரும் அருந்ததியா் வகுப்பை சோ்ந்தவா்கள். சொந்த வீடுகள் இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனா். வாடகை செலுத்த போதிய வருமானம் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனா். இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த 2 ஆண்டுகளாக தொடா்ந்து ஆட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்து வருகின்றனா். எனவே மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

56வது முறையாக இணைந்து நடிக்கும் மோகன்லால் - ஷோபனா!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

SCROLL FOR NEXT