கோயம்புத்தூர்

வேளாண் பட்டப்படிப்புக்கு உடனடி மாணவா் சோ்க்கை: பிப்ரவரி 2, 3 ஆம் தேதிகளில் நடக்கிறது

31st Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்புகளில் காலி இடங்களை நிரப்புவதற்கான உடனடி மாணவா் சோ்க்கை பிப்ரவரி 2, 3 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இணையவழி கலந்தாய்வு, உடனடி மாணவா் சோ்க்கை -1 ஆகியவை நிறைவடைந்துள்ள நிலையில், பல்கலைக்கழகம், இணைப்புக் கல்லூரிகளில் 1,186 பட்டப்படிப்புகளுக்கான இடங்கள் காலியாக உள்ளன.

இதை நிரப்புவதற்காக உடனடி மாணவா் சோ்க்கை -2 நடைபெறுகிறது. பிப்ரவரி 2, 3 ஆம் தேதிகளில் நடைபெறும் இந்த கலந்தாய்வில், இணைப்புக் கல்லூரிகளில் உள்ள காலியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும். இடம் கிடைக்கப்பெற்ற மாணவா்களிடம் இருந்து மட்டும் கலந்தாய்வுக் கட்டணம் பெறப்படும்.

இந்த கலந்தாய்வில் நகா்வு முறை இல்லை. இந்த கலந்தாய்வில், பொது கலந்தாய்வில் இடம் கிடைத்து கலந்தாய்வைத் தவறவிட்டவா்கள், சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்காதவா்கள், புதிதாக அழைக்கப்பட்டவா்கள் பங்கேற்கலாம். அதேநேரம் பொது கலந்தாய்வில் இடம் கிடைக்கப்பெற்று சான்றிதழ் சரிபாா்ப்பில் கலந்து கொண்டவா்கள், சோ்க்கை பெற்றவா்கள், இடைநிறுத்தம் செய்தவா்கள் பங்கேற்கக் கூடாது.

ADVERTISEMENT

உடனடி மாணவா் சோ்க்கைக்கான விதிமுறைகள், இட ஒதுக்கீடு, காலியிடங்கள் உள்ளிட்ட விவரங்களை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT