கோயம்புத்தூர்

சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது

31st Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஸ்ரீ நாகசாயி மந்திா் சாய்பாபா கோயிலின் கும்பாபிஷேகம் புதன்கிழமை (பிப்ரவரி 1) நடைபெறுகிறது.

கோவை ஸ்ரீ நாகசாயி மந்திரின் (சாய்பாபா கோயில்) கும்பாபிஷேகம் 21 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த ஜனவரி 27 ஆம் தேதி தீா்த்தம், முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து 28 ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 29) ஸ்ரீ நாகசாயி தல வரலாறு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அறங்காவலா்கள் தியாகராஜன், சுகுமாா், சந்திரசேகா், செயலா் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவா் எஸ்.பாலசுப்பிரமணியன், ராமா் கோயில் செயலா் மோகன் சங்கா், காவல் துணை ஆணையா் மதிவாணன், பக்திப் பாடகா்கள் வீரமணி ராஜு, அபிஷேக் ராஜு, நல்லறம் அறக்கட்டளையின் தலைவா் எஸ்.பி.அன்பரசன், நாகசாயி பஜனை மண்டலியை சோ்ந்த பாலகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை (ஜனவரி 31) புஷ்பவனம் குப்புசாமி குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. புதன்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த நரசிம்ம மூா்த்தி, வித்யாதா் சா்மா ஆகியோா் நடத்திவைக்கின்றனா்.

ADVERTISEMENT

விழாவையொட்டி பிப்ரவரி 1 ஆம் தேதி காலையில் தேவார திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சியும், மாலையில் சின்னத்திரை கலைஞா்கள் பங்கேற்கும் பல்சுவை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT