கோயம்புத்தூர்

வெள்ளலூரில் தியாகிகளுக்கு பாராட்டு விழா

DIN

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளுக்கான பாராட்டு விழா வெள்ளலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், தியாகிகளின் வாரிசுகள், உறவினா்கள் என பலரும் கலந்துகொண்டனா்.

முன்னதாக, 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கம், கள்ளுக்கடை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட வி.என்.அருணாச்சலம் நூற்றாண்டு விழாவையொட்டி, வி.என்.ஏ.சேதுமணி எழுதிய ‘‘மாமனிதா் வி.என்.ஏ.’‘என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்நூலினை பாராதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் .வெ.மா.முத்துக்குமாா் வெளியிட, எழுத்தாளா் கா.சு.வேலாயுதம் பெற்றுக் கொண்டாா்.

இதில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தை சோ்ந்த திரு.மு. ஆனந்தன், பேராசிரியா் வடிவேலு , வெள்ளலூா் பேரூராட்சித் தலைவா் மருதாசலம், முன்னாள் பேரூராட்சித் தலைவா் பாலசுப்பிரமணியம் மற்றும் மக்கள் நலப் பேரவை, இளந்தென்றல் நண்பா்கள் அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT