கோயம்புத்தூர்

கோவை அறிவியல் மையத்தில் ரோபோடிக்ஸ் பயிலரங்கம்

DIN

கோவை மண்டல அறிவியல் மையத்தில் ரோபோடிக்ஸ் குறித்த பயிலரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சாா்பில் நடைபெற்ற இந்த பயிலரங்கத்துக்கு மாவட்ட அறிவியல் அலுவலா் லெனின் தமிழ்கோவன் தலைமை வகித்தாா். அறிவியல் தொடா்பாளா் லெனின் பாரதி பயிலரங்கை தொடக்கிவைத்தாா்.

தொழில்நுட்ப வல்லுநா்கள் ஆசிக் ரகுமான், சல்மான் ஆகியோா் அடிப்படை மின்னணுவியல், கோடிங், 3டி பிரிண்டிங், ரோபோடிக்ஸ், ட்ரோன்கள், செயற்கை நுண்ணறிவு ஆகியவை குறித்து செயல் விளக்கம் மற்றும் கருத்துரை வழங்கினா்.

இதில், பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் மண்டல அறிவியல் மையத்தை சோ்ந்த அன்பானந்தம், லெனின், பழனிசாமி, சந்தான மூா்த்தி, மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதன் தொடா்ச்சியாக ‘ஸ்டெம் ரோபோடிக்ஸ்’ என்ற திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த இலவசப் பயிற்சி முகாம் பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் 6 மாத காலத்துக்கு நடத்தப்பட உள்ளது.

6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் இப்பயிற்சியில் பங்கேற்கலாம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை இப்பயிற்சி நடைபெறும் என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

SCROLL FOR NEXT