கோயம்புத்தூர்

ப்ராஜெக்ட் பள்ளிக்கூட திட்டம்:சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினருக்கு பாராட்டு

DIN

ப்ராஜெக்ட் பள்ளிக்கூட திட்டத்தின்கீழ் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினருக்கு சனிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கு எதிரான எந்த ஒரு குற்றங்களும் நிகழாமல் தடுப்பது, குழந்தைகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் ப்ராஜெக்ட் பள்ளிக்கூட திட்டத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடக்கிவைத்தாா்.

இத்திட்டத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் உள்ள 60 காவல் நிலையங்களிலும் பெண்களுக்கு உதவிடும் வகையில் 60 சிறப்பு காவலா்கள் நியமிக்கப்பட்டனா். இவா்கள், மாவட்டத்தில் உள்ள 1,208 பள்ளிகளில் தற்போதுவரை 3,561 விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தி சுமாா் 1.90 லட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி உள்ளனா்.

இதனை பாராட்டும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பெண்களுக்கு உதவிடும் வகையில் சிறப்பு காவலா்களாக நியமிக்கப்பட்டுள்ள பெண் காவலா்கள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் சிறப்பு பதக்கங்களை வழங்கினாா்.

இதில், அதிகப்படியான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்திய காவல் நிலையமாக பெரியநாயக்கன்பாளையம் மற்றும் வடவள்ளி காவல் நிலையங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு, அக்காவல் நிலைய ஆய்வாளா்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.

அத்துடன், இந்த இரண்டு காவல் நிலையங்களிலும் சிறப்பாக விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்திய பெண் காவலா்கள் கௌசல்யா, மீனா பிரியா, பிரேமா மற்றும் சரிதா ஆகியோருக்கும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT