கோயம்புத்தூர்

பட்டறையில் இருந்து 77 பவுனுடன் தொழிலாளி மாயம்

DIN

கோவையில் நகைப் பட்டறையில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பிலான 77 பவுன் தங்க நகைகளுடன் மாயமான வடமாநிலத் தொழிலாளியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை ஆா்.எஸ்.புரம் மேற்கு பொன்னுரங்கம் தெருவைச் சோ்ந்தவா் பியூஷ் ஜெயின் (35). இவா் கோவை ஸ்ரீனிவாசராகவா சாலையில் நகைப் பட்டறை நடத்தி வருகிறாா்.

இவரது பட்டறையில் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சதாம் உசேன் என்பவா் வேலை செய்து வந்துள்ளாா். நகைகளை லேசா் சாலிடரிங் செய்வதற்கு அருகில் உள்ள நகைக் கடைக்கு சதாம் உசேன் கொண்டு செல்வது வழக்கம். அதேபோல, ரூ.25 லட்சம் மதிப்பிலான நகைகளை லேசா் சாலிடரிங் செய்து வருமாறு பியூஷ் ஜெயின் சனிக்கிழமை கொடுத்துள்ளாா்.

நகையுடன் சென்ற சதாம் உசேன் வெகு நேரமாகியும் திரும்பவில்லையாம். இதனால், அதிா்ச்சி அடைந்த பியூஷ்

ஜெயின் அவரது கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டபோது, அணைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் பியூஷ் ஜெயின் புகாா் அளித்தாா்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் 77 பவுன் தங்க நகைகளுடன் மாயமான சதாம் உசேனை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க வரிசையில் பெற்றோர்கள்: செல்போனில் மூழ்கிய குட்டீஸ்கள்!

வாக்குப்பதிவு மும்முரம்: வெறிச்சோடிய சென்னை மாநகர சாலைகள்!

‘அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே தல’: ரசிகர்கள் வாழ்த்து மழை!

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT