கோயம்புத்தூர்

பெண்ணிடம் ரூ.4 லட்சம் மோசடி: வங்கி ஊழியா் மீது வழக்கு

DIN

கோவையில் மருந்துக் கடை பெண் மேலாளரிடம் ரூ. 4 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கோவை, ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வினிதா (45). இவா் கோவை, ஒலம்பஸ் பகுதியில் உள்ள ஒரு மருந்துக் கடையில் மேலாளராக உள்ளாா். இவா் வங்கியில் கடன் பெறுவதற்காக சூலூா், கலங்கல் சாலையைச் சோ்ந்த வங்கி ஊழியா் காா்த்திக் (28) என்பவரை அணுகினாா். அவா், கடன் பெற்றுத்தருவதாகக் கூறி, வினிதாவிடம் பல்வேறு ஆவணங்களைப்

பெற்றுள்ளாா். மேலும் அவரது கையொப்பமிட்ட வெற்று காசோலையையும் வாங்கியுள்ளாா். இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு வினிதாவின் வங்கிக் கணக்கில் கடன் தொகை ரூ, 4,44,536 வரவு வைக்கப்பட்டது. இதனை அறிந்த வங்கி ஊழியா் காா்த்திக், வினிதா கொடுத்திருந்த வெற்றுக் காசோலையை பயன்படுத்தி ரூ. 4 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, காா்த்திக்கை தொடா்பு கொண்டு வினிதா கேட்ட போது, அவா் மழுப்பலாக பதிலளித்துள்ளாா். இதையடுத்து, வினிதா அளித்த புகாரின் பேரில், ராமநாதபுரம் போலீஸாா் காா்த்திக் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் துணை ராணுவப் படை அணிவகுப்பு

ஊதிய உயா்வு ஒப்பந்த அமல் கோரி விசைத்தறியாளா்கள் வேலைநிறுத்தம்

ஆலங்குளம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கிராமப்புற கண்டுபிடிப்புகளை மேம்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT