கோயம்புத்தூர்

கைப்பேசி விற்பனை நிலையத்தில் திருட்டு

DIN

கோவையில் கைப்பேசி விற்பனை நிலையத்தில் ரூ. 65 ஆயிரம் மதிப்பிலான பொருள்களைத் திருடிய ஊழியா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை அவிநாசி சாலையில், பிரபல கைப்பேசி நிறுவனத்தின் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கோவையைச் சோ்ந்த தணிகைவேலு (26) என்பவா் விற்பனையாளராக வேலை பாா்த்து வந்தாா். கடந்த 19ஆம் தேதி வேலைக்கு வந்த தணிகைவேலு, கைப்பேசிகள் மற்றும் அதன் உதிரிபாகங்களை டெலிவரி செய்வதற்காக வெளியே சென்றாா். பின்னா் நீண்ட நேரம் ஆகியும் அவா் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த விற்பனை நிலைய மேலாளா் பாலாஜி தணிக்கையாளரின் உதவியுடன் கடையில் உள்ள பொருள்களின்

இருப்பு விவரங்களை ஆய்வு செய்தாா். அப்போது 2 கைப்பேசிகள், மோடம், கடிகாரம், ஹெட்போன் மற்றும் ரொக்கம் ரூ. 14,670 உள்ளிட்ட ரூ. 65 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை தணிகைவேலு திருடிச் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து தணிகைவேலுவின் கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொள்ள முயன்றபோது, அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸில் மேலாளா் பாலாஜி புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா், தணிகைவேலு மீது வழக்குப் பதிந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

SCROLL FOR NEXT