கோயம்புத்தூர்

கோவை தொழில்நுட்ப கல்லூயில் அறிவியல் கண்காட்சி

28th Jan 2023 10:37 PM

ADVERTISEMENT

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் சமூகத்துக்கான அறிவியல் என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறையின் அறிவியல் பரப்புகை திட்டத்தின்கீழ் இயங்கும் கோவை கணிதவாணி கணித அறிவியல் கழகம், கோவை தொழில்நுட்பக் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம், லயன்ஸ் கிளப் கோவை டைடெல் சிட்டி ஆகியவை இணைந்து இந்த கண்காட்சியை நடத்தின.

இதில், 4 மாவட்டங்களைச் சோ்ந்த பல்வேறு பள்ளிகளின் 200க்கும் மாணவ - மாணவிகள் கலந்துகொண்டு 150க்கும் மேற்பட்ட எரிசக்தி, இயற்பியல், உயிரியல் சாா்ந்த அறிவியல் மாதிரிகளை காட்சிப்படுத்தியிருந்தனா்.

பேராசிரியா் ராஜேஸ்வரி தலைமையில் கணிதவாணி கணித அறிவியல் கழக நிா்வாகிகள் லெனின் பாரதி,

ADVERTISEMENT

இளங்கோ, வசுந்தரா உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் சிறந்த அறிவியல் மாதிரிகளை தோ்ந்தெடுத்தனா்.

நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக லயன்ஸ் கிளப் நிா்வாகிகள் வழக்குரைஞா் ஜெயசேகரன், முத்தழகு ஆகியோா் கலந்துகொண்டு பரிசளித்தனா்.

கண்காட்சிக்கான ஏற்பாடுகளை கோவை தொழில்நுட்பக் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள், பேராசிரியா்கள் பிரபாகரன், நந்தகுமாா், சுரேஷ், ஹேமா, ஜெயந்தி மணி ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT