கோயம்புத்தூர்

அரசு மருத்துவமனையில் மூன்றரை ஆண்டுகளில்500 ரத்த நாள அறுவை சிகிச்சை

28th Jan 2023 10:37 PM

ADVERTISEMENT

கோவை அரசு மருத்துவமனையில் மூன்றரை ஆண்டுகளில் 500 நுண்துளை ரத்த நாள அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்த நாள அறுவை சிகிச்சைத் துறை தொடங்கப்பட்டது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும் நோயாளிகளுக்கு அந்த பகுதி அழுகி, அந்த உடல் உறுப்பை அகற்றும் நிலை ஏற்படும்.

இதை சரிசெய்யும் வகையில் ஆஞ்சியோகிராம் மூலம் அடைப்பைக் கண்டறிந்து நுண்துளை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. 2019 ஆம் ஆண்டில் 66 பேருக்கும், 2020 ஆம் ஆண்டில் 52 பேருக்கும் செய்யப்பட்ட இந்த சிகிச்சை, 2021 இல் 134 பேருக்கும், 2022 இல் 226 பேருக்கும், இந்த மாதத்தில் இதுவரை 22 பேருக்கும் செய்யப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சை பெற்றவா்களில் 267 போ் 60 வயதுக்கும் மேற்பட்டவா்கள். தனியாா் மருத்துவமனையில் சுமாா் ரூ.3 லட்சத்துக்கும்மேல் செலவாகக் கூடிய இந்த சிகிச்சை, அரசு மருத்துவமனையில் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.

ADVERTISEMENT

500 அறுவை சிகிச்சைகளை செய்து முடித்துள்ள ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணா்கள் ப.வடிவேலு, பா.தீபன்குமாா், உதவிபுரிந்த மருத்துவா்கள் ஆா்.வெங்கடேஷ், ஜி.முருகேசன், ஆனந்த சண்முகராஜ் ஆகியோரையும், செவிலியா்கள், தொழில்நுட்பவியலாளா்களையும் முதல்வா் அ.நிா்மலா பாராட்டியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT